Thursday, April 22, 2010

இது தான்டா கிஸ்!

கோவை வ.உ.சி. பூங்காவில் கொஞ்சி விளையாடும் கிளிகள்

நன்றி தினமலர்

Bookmark and Share

Wednesday, April 14, 2010

தும்பிக்கை வாழைத்தார்


திருச்சூர் அருகே சேராமங்கலத்தைச் சேர்ந்த தாமஸ் பாவரட்டி என்பவரின் தோப்பில் உள்ள ஆறு அடி உயரமுள்ள பிரமாண்ட தும்பிக்கை வாழைத்தார். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான காய்கள் உள்ளன. இந்த வாழைத்தார் 2009ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் குலை தள்ளியது. இதன் மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Bookmark and Share

Monday, April 12, 2010

பலாப்பழத்தை ருசிக்கும் அணில் மற்றும் கருங்குரங்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை வட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பலா மரத்தில் ஒரு மர அணிலும் , கருங்குரங்கும் பலாப்பழத்தை ருசிப்பதை படத்தில் காணலாம்.


Bookmark and Share

Sunday, April 11, 2010

சமைக்காமலே சாப்பிடும் புதிய அரிசி


சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.

இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.
நன்றி தினகரன் நாளிதழ்

Bookmark and Share

Friday, April 9, 2010

மலைப்பாம்பை இரையாக்கும் புலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்குள்ள புலிகள் பசுமையான இடங்களை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. கடும் பசியினால் அலைந்த புலி ஒன்று இரையாக வேறு விலங்கினங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றை கடித்து சாப்பிடும் அரிய காட்சியை படத்தில் காணலாம்.
********
நம் கருத்து:

மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி, விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மாற்றி விளையாண்டு கொண்டிருக்கிறான் மனிதன். வரப்போகும் ஆபத்துகள் அறியாமல். முன்னேற்றம் எனும் பெயரில் காடுகளை அழித்ததில் மனிதனின் வாழ்வு ஒழிந்தது. மழையும் பொய்த்தது. பறவைகள் இருப்பிடம் இழந்தது. இன்று விலங்குகளும் உணவுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது. இனி மனிதனும் மாறுவான்.

ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே கண்ட பல விநோத நிகழ்ச்சிகளும் மனிதனை மனிதன் திண்கிறான் எனும் பெயரில் நடைபெறாலாம். மரம் வளர்ப்போம் மழை வளர்ப்போம்.


நீங்களும் இக்கருத்தை ஆமோதித்தால் ஒப்புதலை தெரிவியுங்கள் வாக்குகளாக

Bookmark and Share

Wednesday, April 7, 2010

பாகனை குத்த ஓடும் யாணை - மிரண்டு ஓடும் பாகன் ஓர் உண்மை சம்பவம்

வாடா வா குளிக்க வா என்று கட்டாயப்படுத்தி இழுத்துச் பாகன். மூடு இல்லை மணிகண்டனுக்கு. ஆற்றில் அடுத்த யாணையை குளிப்பாட்ட வந்த பாகன் ராஜீவ். அடம்பிடித்த மணிகண்டனை அடக்க, தலையில் குத்தினார். வலியால் துடித்து, அப்போதைக்கு அடங்கிப் போய் குளித்துமுடித்தான் மணிகண்டன். உடல் சூடு தணிந்தாலும் மனதில் பாகன் மீது ஆத்திரம் தணியவில்லை. கோயிலுக்கு திரும்பி சங்கிலியில் கட்டுப்பட்டான். மீண்டும் ராஜீவை அங்கே பார்த்ததும், பழிவாங்கும் வெறி கிளம்பியது மணிகண்டனுக்கு. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடினான். தந்தந்தங்களால் பாகனை குத்திப் புதைக்க முயற்சித்தான். ஆனால் ஒடிசலான பாகனோ சாமர்த்தியமாக தந்தங்களுக்கு இடையே லாவகமாக நுழைந்துகொண்டார். மண்ணில் புதைந்த தந்தங்களை எடுக்க மணிகண்டன் திணறிய வினாடிகளில் கால்களுக்கு இடையெ புகுந்த பாகன் ராஜீவ் கிரேட் எஸ்கேப். பக்தர்களை மயிர்க்கூச்செரியச் செய்த இந்த காட்சிகள், இங்கே நம்மையும். காட்சிகள் : கேரள மாநிலம் - பத்தனம் திட்டா மாவட்டம் - ஓமலூர் ரெட்டை கந்தசாமி கோயில்
நன்றி தினகரன் நாளிதழ்

[விலங்குகள் மட்டுமே நம் கொடுமைகளை பொறுத்துக்கொள்கின்றன. இந்த யாணையைப் போல் எல்லா விலங்குகளும் தீங்கிழைத்தோரை திருப்பித்தாக்க முயன்றால் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் தேவையில்லை]
******
நீங்களும் இக்கருத்தை ஆமோதித்தால் ஒப்புதலை தெரிவியுங்கள் வாக்குகளாக

Bookmark and Share