சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.
இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.

நன்றி தினகரன் நாளிதழ்
0 comments:
Post a Comment