Wednesday, April 7, 2010

பாகனை குத்த ஓடும் யாணை - மிரண்டு ஓடும் பாகன் ஓர் உண்மை சம்பவம்

வாடா வா குளிக்க வா என்று கட்டாயப்படுத்தி இழுத்துச் பாகன். மூடு இல்லை மணிகண்டனுக்கு. ஆற்றில் அடுத்த யாணையை குளிப்பாட்ட வந்த பாகன் ராஜீவ். அடம்பிடித்த மணிகண்டனை அடக்க, தலையில் குத்தினார். வலியால் துடித்து, அப்போதைக்கு அடங்கிப் போய் குளித்துமுடித்தான் மணிகண்டன். உடல் சூடு தணிந்தாலும் மனதில் பாகன் மீது ஆத்திரம் தணியவில்லை. கோயிலுக்கு திரும்பி சங்கிலியில் கட்டுப்பட்டான். மீண்டும் ராஜீவை அங்கே பார்த்ததும், பழிவாங்கும் வெறி கிளம்பியது மணிகண்டனுக்கு. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடினான். தந்தந்தங்களால் பாகனை குத்திப் புதைக்க முயற்சித்தான். ஆனால் ஒடிசலான பாகனோ சாமர்த்தியமாக தந்தங்களுக்கு இடையே லாவகமாக நுழைந்துகொண்டார். மண்ணில் புதைந்த தந்தங்களை எடுக்க மணிகண்டன் திணறிய வினாடிகளில் கால்களுக்கு இடையெ புகுந்த பாகன் ராஜீவ் கிரேட் எஸ்கேப். பக்தர்களை மயிர்க்கூச்செரியச் செய்த இந்த காட்சிகள், இங்கே நம்மையும். காட்சிகள் : கேரள மாநிலம் - பத்தனம் திட்டா மாவட்டம் - ஓமலூர் ரெட்டை கந்தசாமி கோயில்
நன்றி தினகரன் நாளிதழ்

[விலங்குகள் மட்டுமே நம் கொடுமைகளை பொறுத்துக்கொள்கின்றன. இந்த யாணையைப் போல் எல்லா விலங்குகளும் தீங்கிழைத்தோரை திருப்பித்தாக்க முயன்றால் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் தேவையில்லை]
******
நீங்களும் இக்கருத்தை ஆமோதித்தால் ஒப்புதலை தெரிவியுங்கள் வாக்குகளாக

Bookmark and Share

2 comments:

நண்பன் said...

மனிதாபிமானம் இல்லாத மிறுகம் பாகண்

murali said...

welldone elephant

Post a Comment